சுடச்சுட

    

    காணொலி காட்சி மூலம் மோடியின் பேச்சை ரசித்த மதுரை மக்கள்

    By dn  |   Published on : 09th March 2014 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    காணொலிக் காட்சி (விடியோ கான்பரன்சிங்) மூலம், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் பேச்சை, சனிக்கிழமை மாலை மதுரையில் நூற்றுக்கணக்கானோர் ரசித்துக் கேட்டனர்.

    புதுதில்லியிலிருந்து தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டவர்களுடன், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மதுரையில் 5 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், புதூர் உள்ளிட்ட இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.

    ஆனால், பழங்காநத்தம் பகுதி மாடக்குளம் பிரதான சாலையில் கண்ணன் லாலா டீ கடை முன் இரு பெரிய தொலைக்காட்சி திரை மூலம் மோடியின் பேச்சை மக்கள் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் மற்றும் இந்திய முன்னேற்ற மோடி பேரவை அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ். அருணாச்சலம் ஆகியோர், இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மோடியின் பேச்சைக் கேட்க ஆண்கள், பெண்கள் என வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக தேனீர் அளிக்கப்பட்டது.

    மாலை 6 மணிக்கு புதுதில்லியில் இருந்து மோடி பேசினார். இது, இரவு 8 மணி வரையில் ஒளிபரப்பானது. ஆனால், மதுரையிலிருந்து மோடியுடன் உரையாடுவதற்கான வசதிகள் ஏதும் இல்லை. இதனால், சென்னை உள்ளிட்ட நகர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு மோடி அளித்த பதில்களையும், மதுரை மக்கள் ரசித்துக் கேட்டனர்.

    கேள்வி, பதில்கள் ஆங்கிலம், ஹிந்தியில் இருந்ததால், மதுரையில் பேச்சைக் கேட்டவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் விளக்கிக் கூறும் நிலை ஏற்பட்டது.

    காணொலிக் காட்சியில் பெண்கள் பிரச்னை, பெண் கருக்கொலை, பெண்களுக்கு கல்வி, பொருளாதார மேம்பாட்டை அளிப்பதன் அவசியம் ஆகியன குறித்து, மகளிர் தினத்தில் நரேந்திர மோடி பேசினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai