Enable Javscript for better performance
\\\"கூட்டணி குறித்து திமுகவிடம் பேசவில்லை\\\'- Dinamani

சுடச்சுட

    
    chidambaram

    திமுகவுடன் கூட்டணி சேருவது குறித்து அக் கட்சியில் யாருடனும் நான் பேசவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், இளைஞர்கள், பெண்களிடம் தேர்தல் தொடர்பாக ப. சிதம்பரம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

    அப்போது காங்கிரஸ் தொண்டர் ஒருவர் எழுந்து, திமுக அணியில் காங்கிரஸ் கூட்டணி சேருமா எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த சிதம்பரம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சேருவது குறித்து நான் திமுக தலைமை உள்ளிட்ட யாரிடமும் பேசவில்லை. ஆனால், அகில இந்திய தலைமை கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தெரிகிறது. கூட்டணி விவகாரத்தை கவனித்துக்கொள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை உள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai