சுடச்சுட

    
    prakash_karat

    தேர்தல் கூட்டணி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சென்னையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசி நேரத்தில் அதிமுக அணியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சனிக்கிழமை (மார்ச் 8) ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் தியாகிகள் நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சனிக்கிழமை மாலை சென்னை வந்தார்.

    அப்போது அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர். தனித்துப் போட்டியிடுவதா அல்லது திமுக கூட்டணியில் இணைவதா என்பது குறித்து மாநில நிர்வாகிகளின் கருத்துக்களை அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

    இது குறித்து ஜி. ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகளுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினோம். ஞாயிற்றுக்கிழமை கீழ்வெண்மணியில் தியாகிகள் நினைவிடம் திறப்பு விழா இருப்பதால் வரும் 10, 11 தேதிகளில் இரு கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai