Enable Javscript for better performance
தேர்தல் விதிமீறல்:முன்னாள் அமைச்சர் உள்பட 10 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் விதிமீறல்:முன்னாள் அமைச்சர் உள்பட 10 பேர் மீது வழக்கு

    By dn  |   Published on : 09th March 2014 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்பட திமுக, அதிமுக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதியில் திமுக சார்பில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்ததாக ஐ. பெரியசாமி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல், கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள மின்மயான சுவரில் விளம்பரம் செய்ததாக மாவட்ட ஜெயலலிதா பேரவையின் துணைச் செயலர் சோனா சுருளிவேல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் பொது சுவரில் விளம்பரம் செய்த அதிமுக, திமுக, கொங்குநாடு மக்கள் கட்சி, சிஐடியூ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஐப்பன், குணசேகரன், முருகேசன், அஸ்வின் பிரபாகர், பாண்டித்துரை, மனோகரன், கண்ணன், அருள் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai