சுடச்சுட

  
  jaya_cm

  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நாகர்கோவிலில் பிரசாரம் செய்கிறார்.

  இதற்காக நாகர்கோவில் பொருட்காட்சி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

  திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்கும் முதல்வர் ஜெயலலிதா, கார் மூலம் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

  அங்கு அவர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி. ஜான் தங்கத்தை ஆதரித்துப் பேசுகிறார்.

  பொருட்காட்சி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமருவதற்கு வசதியாக இருக்கைகள் போடப்படுகின்றன.

  அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  மைதானத்தை சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு முதல்வர் மீண்டும் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai