சுடச்சுட

  
  nota_sppech

  மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் "நோட்டா' பொத்தான் இடம்பெறவுள்ள சூழலில், நோட்டாவுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் சப்தமின்றி பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.

  இந்த நிலையில், "நோட்டாவை அழுத்துவோம், வேட்பாளரை நிராகரிப்போம்' என்ற அடிப்படையில் தென்காசியை அடுத்த அச்சன்புதூரைச் சேர்ந்த கனகராஜ் (32) என்ற இளைஞர் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

  இப்போது பாளையங்கோட்டையில் வசித்து வரும் இவர், தனியார் கட்டுமான நிறுவனமொன்றில் பொருள் பாதுகாப்பு கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். நோட்டாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதுகுறித்து அவர் கூறியது:

  சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் கட்சிகள், வெற்றி பெற்ற பிறகு வாக்களித்தவர்கள் நலனுக்காகச் செயல்படுவதில்லை. சுயநலனுக்காகவும், கட்சி வளர்ச்சிக்காகவும் மட்டுமே பணிபுரிகின்றனர்.

  மத்தியில் அமையும் ஆட்சி பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்தியாவை ஒளிரச் செய்ய, ஊழல், லஞ்சம், சுயநலம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நோட்டா பொத்தானை அழுத்துங்கள். வேட்பாளரை நிராகரியுங்கள் என்றார் அவர்.

  இதுதொடர்பாக துண்டுப் பிரசுரங்கள் மூலமும் பொதுமக்களிடையை பிரசாரம் தொடங்கியுள்ள இவர், தேர்தல் களம் சூடுபிடிக்கும் தருணத்தில் பல்வேறு நூதன பிரசாரத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai