Enable Javscript for better performance
பவானிசாகர் அருகே சிகிச்சை பலனின்றி பெண்யானை சாவு- Dinamani

சுடச்சுட

    
    last_respect

    பவானிசாகர் வனப்பகுதியில் உயிருக்குப் போராடிய பெண்யானை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

    பவானிசாகர் புலிகள் காப்பகம், காராச்சிக்கொரை வனப்பகுதி, சுஜில்குட்டையில் வனத்தில் உடல்நலம் குன்றிய நிலையில் 20 வயதுள்ள பெண்யானை கிடப்பதாக சனிக்கிழமை தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, பெண்யானை ஒன்று மிகுந்த சோர்வுடன் படுத்துக் கிடந்தது. அந்த யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அந்த யானை உயிரிழந்தது.

    கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானையின் உடலைப் பரிசோதனை செய்தனர். இனச்சேர்க்கைக்கு உடல்தகுதி இல்லாத நிலையில் ஆண்யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்யானை நாளடைவில் உடல்நலம் குன்றி இறந்தது தெரியவந்தது. யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai