சுடச்சுட

  

  மேலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து: ஒருவர் பலி; 2 பேர் காயம்

  By dn  |   Published on : 09th March 2014 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விசாகப்பட்டினத்தில் கட்டுமானப்பணி நடைபெற்று வந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

  இதுகுறித்து கடற்படை வட்டாரங்கள் கூறியதாவது:

  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஐ.என்.எஸ். அரிஹந்த் என்னும் அணுசக்தி நீர்முழ்கிக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கப்பல் கட்டுமானப் பணி சனிக்கிழமை இரவு நடைபெற்றபோது, திடீரென எதிர்பாராதவிதமாக விபத்து நேரிட்டது.

  நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள கொதிகலன் தொட்டியை தொழிலாளர்கள் சோதித்து கொண்டிருந்தனர். அப்போது தொட்டியின் மூடி தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் அமர் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

  அம்ஜத் கான், விஷ்ணு ஆகிய 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

  7 மாதங்களில் 12வது விபத்து: மும்பையில் உள்ள மஸாகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானப்பணி நடைபெற்று வந்த ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பலில் வெள்ளிக்கிழமை நேரிட்ட கரியமிலவாயு கசிவில் சிக்கி அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

  இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே விசாகப்பட்டினம் கப்பல் கட்டுமான தளத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதனுடன் சேர்த்து கடந்த 7 மாதங்களில் இந்தியக் கடற்படை சந்திக்கும் 12ஆவது விபத்து இதுவென்பது, கடற்படை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த இந்தியக் கடற்படை உத்தரவிட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai