Enable Javscript for better performance
அதிருப்தி: தஞ்சாவூரில் டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிருப்தி: தஞ்சாவூரில் டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு

    By dn  |   Published on : 10th March 2014 11:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக டி.ஆர். பாலு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் அவரது உருவபொம்மையை அதேகட்சியைச் சேர்ந்த எம்பி எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் திங்கள்கிழமை எரித்தனர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் தொகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் எம்பி எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், தஞ்சாவூர் காந்திஜி ரோட்டில் உள்ள அண்ணாசிலை அருகே திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில், டி.ஆர். பாலுவை நீக்கிவிட்டு தஞ்சை தொகுதி வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தையே அறிவிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து டி.ஆர். பாலுவின் உருவபொம்மையை எரித்தனர்.

    தகவலறிந்து வந்த முன்னாள் தமிழக அமைச்சரும், தஞ்சாவூர் திமுக நகர செயலருமான உபயதுல்லா, தஞ்சாவூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai