சுடச்சுட

  

  அரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக கோரிக்கை

  By dn  |   Published on : 10th March 2014 11:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடத்தை நெறிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக கோரிக்கை மனு அளித்துள்ளது.

  அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அனகை முருகேசன், நல்லதம்பி, சி.எச்.சேகர் ஆகியோர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் மனு ஒன்றை திங்கள்கிழமை அளித்தனர். அதன் விவரம்:

  கடந்த 5 ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று முதல் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆனாலும், பல்வேறு கட்சிகளின் சார்பில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்கள், அரசு மற்றும் தனியார் சுவர்களில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் ஆகியன இன்னும் அகற்றப்படாமல் இருக்கின்றன.

  எனவே, அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் தேர்தலை சுமுக முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தேமுதிக கேட்டுக் கொண்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai