சுடச்சுட

    
    tamilarauvi

    தமிழகத் தேர்தல் களம் எப்போதும் கால்பந்தாட்ட மைதானம்போலத்தான் இருக்கும். அதிமுக தலைமையில் ஓர் அணியும், திமுக தலைமையில் ஓர் அணியும் அமைந்து மோதிக் கொள்ளும்.

    ஆனால், தற்போதைய மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நடைபெறக்கூடியக் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கூட்டணி அமைப்பதில் கடந்த 2 மாதங்களாக அரசியல் கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டதுபோல, "யாருக்கு வாக்களிக்கப்பது' என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

    ""வாக்குகள் சிதறுவதற்கு ஓரளவு வாய்ப்புகள் இருக்கின்றன. பல தரப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டே இந்திய அரசியலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இயக்கங்களும் உள்ளன. எனினும், அதிமுக - திமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளின் தலைமையிலேயே இதுவரை தேர்தலில் அணி அமைக்கப்பட்டு வந்தது.

    நாடாளும் தன்மைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக அதிக இடங்களைப் பெற வேண்டும் என அதிமுக இடதுசாரிகளோடு கடைசியில் கூட்டணி அமைக்கவில்லை. ஈழத் தமிழர் பிரச்னை மற்றும் இதரப் பிரச்னைகளால் காங்கிரúஸாடு திமுக கூட்டணி அமைக்கவில்லை. இதனாலே பல அணிகள் உருவாகியுள்ளன. இந்த முறை தேர்தலில் ஓரளவு வாக்குகள் சிதறவே செய்யும். என்னைப் பொருத்தவரையில் விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடத்துவதே சிறந்ததாகும் இருக்கும்'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன். காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியது:

    ஐரோப்பிய நாடுகளில் இரு முனை கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் தற்போது இரு முனை என்பதைத் தாண்டி, ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான சூழலுக்கு அழைத்துச் செல்லுமா என்பது கேள்விக்குறிதான்.

    ""பல அணி அமைத்து போட்டியிடுவது என்பது ஆரோக்கியமானது இல்லைதான். தனித் தனிக் கட்சிகள், அதனதன் கொள்கையைச் சார்ந்து இயங்கி, தேர்தலைச் சந்தித்து, ஆட்சியைப் பிடிப்பதே சரியாக இருக்கும்.

    அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் தற்போது இல்லாததால், ஓரளவு ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து அணி அமைத்து தேர்தலைக் காண்கின்றன. இதனை அரசியல் மாற்றம் என்று சொல்லமாட்டேன்.

    திமுக, அதிமுக என்ற திராவிடக் கட்சிகளே 45 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்தக் கட்சிகளிடம் இருந்து தமிழகம் விடுதலை பெற வேண்டும். தற்போது அமைந்துள்ள அணிகளில் பாஜக அணிக்கும், அதிமுக அணிக்கும் மட்டுமே தலா 30 சதவீத வாக்குகள் உள்ளன. இதனால் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நேரடி மோதல் ஏற்படக்கூடிய சூழல் இருக்கிறது.

    இதை நோக்கியே தற்போதைய தமிழக அரசியல் சூழல் மாறியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இங்கு இரு கட்சி தேர்தல் முறைக்கு வாய்ப்பில்லை.

    ஏனெனில் பல மதங்கள், பல இனங்களைக் கொண்ட நாடு இந்தியா. மேலை நாடுகளில் பெரும்பாலானவை ஒரு தேசம், ஓரினம் கொண்டவை. அதனாலேயே அங்கு சாத்தியமாகிறது.

    தேர்தலில் பல அணி இருப்பது, வாக்காளர்களை எந்த விதத்திலும் குழப்பாது. அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அந்த அணிக்கே வாக்களிப்பர். புதிய வாக்காளர்கள் தமிழகத்தில் 48 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கற்றவர்கள். அவர்கள் தெளிவாகவே வாக்களிப்பார்கள்'' என்றார் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai