சுடச்சுட

  
  tamilarasan

  காங்கிரஸ்- பாஜகவுக்கு மாற்றான தேசிய ஆளுமையாக முதல்வர் ஜெயலலிதா விளங்குகிறார் என்றார் இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன்.

  திருச்சியில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

  எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அடித்தள மக்களின் சமூக, பொருளாதார நிலை உயர்வதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

  சென்னையில் ஒரு தலித் மாணவர் லண்டன் சென்று உயர் ஆராய்ச்சிக் கல்வி பயில ரூ. 1.20 கோடி வரையிலான உதவிகள் அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன.

  ஒட்டுமொத்த தேசிய நலனும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனும் பாதுகாக்க, காங்கிரஸ்- பாஜகவுக்கு மாற்றான தேசிய ஆளுமையாக முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார்.

  தாழ்த்தப்பட்ட மக்கள் இலவச உயர்கல்வி பெறுவதற்கான அரசாணை 92-ல் சில நிர்வாக நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறதே தவிர, கொள்கைரீதியாக அதிமுகவைக் குறை சொல்ல முடியாது.

  ஒதுக்கப்பட்ட நிதிக்கு அதிகமாக மாணவர்கள் வந்ததால் இந்த நிலை ஏற்பட்டது. வரும் கல்வியாண்டில் அதைச் சரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் தமிழரசன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai