சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் கடல்சார் தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை: ஜெயலலிதா

    By dn  |   Published on : 10th March 2014 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டார். இம்மாவட்டத்தில் கடல்சார் தொழில்பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவிலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது: குமரி மாவட்டத்தில் கடந்த 33 மாதங்களில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தக்கலையில் 3 மருத்துவமனையுடன் கூடிய மருந்தகமும், மணவாளக்குறிச்சியில் 2 மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டுள்ளன. 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்று, 30 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சுசீந்திரம், தேரூர் மணக்குடியில் பறவைகள் பாதுகாப்பு மண்டலம் அறிவிக்கப்பட்டு, ரூ.1.68 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    81 வருவாய் கிராமங்கள் மேம்படுத்தப்பட்டு 107 புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.10.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரூ.1.50 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    திருவட்டார், சுசீந்திரம் ஆகியவை புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டு, அதற்கான வளர்ச்சிக்கு தலா ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    சுசீந்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் திருக்கோயில்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த பள்ளிகளை நிர்வகிக்க அரசு வழங்கி வந்த ஆண்டு மானியம் ரூ.1 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்தபட்டுள்ளது.

    தொன்மை நிறைந்த இரணியல் அரண்மனையின் பராமரிப்புக்கு ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    குளச்சல் மீன்பிடித் துறைமுகப் பணிக்கு ரூ.87.75 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இணையம் புத்தன்துறையில் ரூ.2.40 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுசீந்திரத்தில் கவிமணிக்கும், களியக்காவிளையில் மொழிப்போர் தியாகி சிதம்பர நாதனுக்கும் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடவும், மார்ஷல் நேசமணி திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கவும் உத்தரவிட்டேன். மேலும், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணிக்கு சிலையுடன் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்தேன்.

    குமரி மாவட்டத்தில் கடல்சார் தொழில் பூங்கா 250 ஏக்கரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் பூங்காவில் முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்.

    மேலும், பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள், ரப்பர் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai