சுடச்சுட

    

    தனியார் பால், தயிர் விலை உயர்வு: போராட்டம் நடத்த பால் முகவர்கள் முடிவு

    By dn  |   Published on : 10th March 2014 11:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் பால் மற்றும் தயிர் விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி திங்கள்கிழமை கூறியதாவது:

    பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருள்கள் விலை உயர்வைக் காரணம் காட்டி, 2-ஆவது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. மார்ச் 3-ஆம் தேதி ஹெரிடேஜ் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஜெர்சி, திருமலா பால் நிறுவனங்கள் திங்கள்கிழமை(மார்ச் 10) முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தின. வரும் 12-ஆம் தேதி முதல் டோட்லா, ஆரோக்கியா ஆகிய நிறுவனங்களின் பால் விலையும் உயர்கிறது.

    பால் விலை மட்டுமின்றி பாக்கெட் தயிர், கப் தயிர் ஆகியவற்றின் விலையையும் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 40 நாள்களில் இரண்டு முறை பால் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. தனியார் பால் விலை உயர்வை தடுக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், பால் வளத்துறைக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த விலை உயர்வை தனியார் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

    வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் பால் முகவர்கள் சங்க ஆண்டு விழாவில் போராட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றார் எஸ்.ஏ.பொன்னுசாமி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai