சுடச்சுட

  

  தினமணி செய்தி எதிரொலி: நாமக்கல் மாவட்டத்தில் மூடப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகள் திறப்பு

  By dn  |   Published on : 10th March 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kamarajar

  மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சித் தலைவகளின் சிலைகளுடன் சேர்த்து மூடப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகள் தினமணி செய்தி காரணமாக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் இந்த உடனடி நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.

  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

  உள்ளாட்சி ஊழியர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மட்டுமன்றி பெரியார், காமராஜர், நேரு போன்ற தேசத் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டன.

  இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதுடன், மறைக்கப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக "தேசத் தலைவர்களின் சிலைகளுக்கும் தடையா?' என்ற தலைப்பில் தினமணியில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.

  இதையடுத்து, நாமக்கல் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.தட்சிணாமூர்த்தி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு மாறாக மூடி மறைக்கப்பட்டிருந்த மறைந்த தேசத் தலைவர்களின் சிலைகளைத் திறக்க உத்தரவிட்டார்.

  இதனடிப்படையில், நாமக்கல் பேருந்து நிலையம் முன் நேரு பூங்காவில் மூடப்பட்டிருந்த காமராஜர், நேரு சிலைகளும், பரமத்தியில் மூடப்பட்டிருந்த காமராஜர் சிலையும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai