சுடச்சுட

  

  தேர்தல் வந்துவிட்டாலே புதிது. புதிதாக கட்சிகள் உதயமாவது வாடிக்கை. மக்களவைத் தேர்தல் என்றால் சொல்லவும் வேண்டுமா?

  அல்வா தயாரிப்பில் பிரசித்தி பெற்ற திருநெல்வேலியில் மக்களவைத் தேர்தலுக்காக சில புதிய கட்சிகள் வெளியிடும் அதிரடி அறிவிப்புகள் திகைக்கவைக்கின்றன. இரண்டரை மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் அகில பாரத காமராஜர் காங்கிரஸ் கட்சி, தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இந்தக் கட்சியின் அலுவலகம், திருநெல்வேலி வாகைக்குளம் ஆபிரகாம்நகரில் உள்ளது. இந்தக் கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலருமான மு. சுரேஷ்குமார் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் அகில பாரத காமராஜர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். இதற்காக 42 கட்சிகளுடன் (சிறிய, சிறிய கட்சிகள், அமைப்புகள்) கூட்டணி வைத்துள்ளோம். மத்திய சென்னை தொகுதியிலும், பஞ்சாபில் ஒரு தொகுதியிலும்நான் கட்சியின் பொதுச்செயலர் (சுரேஷ்குமார்) போட்டியிடுவார். பஞ்சாப் மாநில மக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு அளிக்கின்றனர். 230 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. 543 தொகுதிகளில் 300 தொகுதிகள் ஆண்களுக்கும், 200 தொகுதிகள் பெண்களுக்கும், 43 தொகுதிகள் திருநங்கைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் பெரிய கட்சிகள் பலவும் எங்களுக்கு அழைப்புவிடுத்தவண்ணம் உள்ளன. அவசரப்பட்டு கூட்டுசேரமாட்டோம். தனித்து நின்று வெற்றி பெறுவோம் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai