சுடச்சுட

  
  police_check

  மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல்லில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 61.68 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், உதவித் தேர்தல் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான காளிமுத்து தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் காமராஜ், காவலர்கள் சிவக்குமார், பால்ராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நாமக்கல் முருகன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது சேலத்திலிருந்து மன்னார்குடிக்குச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்களின்றி 61.687 கிலோ வெள்ளிக் கொலுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அந்த வெள்ளிக் கொலுசுகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் வந்த சேலம் செவ்வாய்பேட்டை அய்யர் தெருவைச் சேர்ந்த ரவியின் மகன் கிஷோர் (23), தேவாங்க புதுத் தெருவைச் சேர்ந்த கோவிந்தனின் மகன் வெங்கடேஷ் (44) ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

  அதில், மன்னார்குடியிலுள்ள நகைக் கடைகளுக்கு வெள்ளிக் கொலுசுகளை உற்பத்தி செய்து எடுத்துச் செல்வதாகவும், சேலத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து, ஆவணங்களைக் காண்பித்துவிட்டு வெள்ளிக் கொலுசுகளைப் பெற்றுக் கொள்ளலாம், அதுவரை பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசுகள் அரசுக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai