சுடச்சுட

    

    காஞ்சிபுரம் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவர் இறந்தார். இதைத் தொடர்ந்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.

    காஞ்சிபுரம் அருகே வையாவூர் ஊராட்சி ஒழையூர் சாலையில் வெடி சந்திரனின் மகன் செந்தில்நாதன் நடத்தி வரும் பட்டாசு ஆலை உள்ளது.

    இந்த ஆலையில் காஞ்சிபுரம் மற்றும் வையாவூர் பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஆலையின் மரத்தடியில் அமர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அவுட் வகை பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 9 பேர் பலத்தக் காயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அன்று இரவே 4 பேர் இறந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காஞ்சிபுரம் டோல்கேட் ராஜனின் மகன் சங்கர் (49) இறந்தார்.

    இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai