சுடச்சுட

  
  palanihyundi

  பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.1.40 கோடியை தாண்டியது.

  பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20 நாள்களில் நிரம்பியதைத் தொடர்ந்து திங்கள்கிழமை திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூ. 1 கோடியே 40 லட்சத்து 38 ஆயிரத்து 540 கிடைத்தது.

  உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், ஒட்டியாணம், கைவளையம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம், வீடு போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 588 கிராமும், வெள்ளி 10 ஆயிரத்து 500 கிராமும் கிடைத்தன.

  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 551-ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, ஆய்வாளர் உமா மற்றும் பலர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பழனி இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, சிட்டி யூனியன் வங்கி உள்ளிட்ட ஏராளமான வங்கிகளின் பணியாளர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai