சுடச்சுட

    
    pon_radhakrishnan

    பாஜக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தொகுதிப் பங்கீடு வரும் புதன்கிழமைக்குள் இறுதி செய்யப்படும் என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    கன்னியாகுமரி பகுதியில் நடைபெறும் பாஜக மாநாட்டுக்காக சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி பேச்சுவார்த்தை வரும் புதன்கிழமைக்குள் இறுதி செய்ய வேண்டியுள்ளது. தேமுதிக, மதிமுக, பாமக, அகில இந்திய முஸ்லீம் கழகம், கொங்குநாடு தேசியப் பேரவை, இந்திய ஜனநாயகக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    பாஜக கூட்டணிக்குள் எவ்விதப் பிரச்னையுமில்லை. பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. எங்களுடன் வரும் கட்சிகளைச் சேர்த்துக் கொள்வோம். அரசியல் கட்சிகளிடையே கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, துணையாக நின்று வெற்றி பெறுவோம்.

    நரேந்திர மோடியின் காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் நானே பங்கேற்றுள்ளேன்.

    ஆகவே, பாஜகவினர் காணொலிக் காட்சிக்குச் செல்லவில்லை எனக் கூறுவது தவறு. பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் திட்டமிட்டு ஈடுபடுவர்.

    ஆகவே, ஒரே மேடையில் அனைவரும் தேர்தல் பிரசாரம் செய்வது அந்தந்தத் சூழலைப் பொருத்ததாக இருக்கும். தேசியத் தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து திட்டமிடப்படும். பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் நரேந்திர மோடி போலவே பாவித்து வெற்றிக்குப் பாடுபடுவோம்.

    தென் மாவட்டங்களில் நரேந்திர மோடி பிராசரம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.

    பேட்டியின்போது, பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சுரேந்திரன், பிரசாரப் பிரிவு நிர்வாகி சசிராமன், மதுரை பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் முத்தண்ணசாமி மற்றும் பழனிவேல்சாமி, குமாரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai