Enable Javscript for better performance
மயிலாடுதுறை மமக வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மனித நேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளரை அறிவிப்பது தொடர்பான கட்சியின் உயர்நிலைக் குழு, அவசர செயற்குழு சென்னையில் திங்கள்கிழமை கூடுகிறது.

    இதுதொடர்பாக, அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெ.எஸ். ரிபாயி ரஷாதி திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம். மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிங்கப்பூர் பிளாசாவில் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் திங்கள்கிழமை கூடுகிறது. காலை 9 மணிக்கு உயர்நிலைக் குழுவும், 11 மணிக்கு அவசர மாநிலச் செயற்குழுவும் கூடி வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்போம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai