Enable Javscript for better performance
முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 21 வரை தேர்தல் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    jayalalitha

    மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏப்ரல் 21-ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறார். முன்னதாக அவரது பிரசார பயண தேதி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

    காஞ்சிபுரத்தில் மார்ச் 3-ஆம் தேதி பிரசாரத்தைத் தொடங்கிய அவர், தென் சென்னை தொகுதியில் ஏப்ரல் 21-ஆம் தேதி தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் ஏப்ரல் 20, 21 ஆகிய இரு தினங்களும், ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக ஏப்ரல் 21-ம் தேதியும் அவர் பிரசாரம் செய்கிறார்.

    முதல்வர் ஜெயலலிதாவின் புதிய பிரசார சுற்றுப்பயணப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட அவரின் பிரசார பயணத் திட்டத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

    அதிமுக சார்பில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பிப்ரவரி 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர். முதற்கட்டமாக மார்ச் 3 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை முதல்வரின் தேர்தல் பிரசார பயண விவரமும் அன்றைய தினம் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், மார்ச் 11 முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை அவரின் பிரசார பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    மார்ச் 11 - சிதம்பரம் (தனி) - சிதம்பரம் பைபாஸ் சாலை, சிதம்பரம்

    மார்ச் 13 - ஈரோடு, திருப்பூர் - பரஞ்சேர் வழி, நால்வழிச் சாலை, காங்கேயம்; அண்ணாநகர், திருப்பூர்-பெருமாநல்லூர் சாலை, திருப்பூர்

    மார்ச் 15 - தூத்துக்குடி - தபால் தந்தி காலனி, 3-வது மைல் அருகில், தூத்துக்குடி

    மார்ச் 16 - கள்ளக்குறிச்சி - ஆர்க்காடு மில், உலகங்காத்தான் ஊராட்சி, சின்ன சேலம் ஒன்றியம்

    மார்ச் 18 - திருவண்ணாமலை - சந்தைமேடு, அரசு கலைக் கல்லூரி எதிரில், திருவண்ணாமலை

    மார்ச் 19 - தென்காசி (தனி) - ஏஞ்சல் பள்ளி மைதானம் அருகில், சங்கரன்கோவில்

    மார்ச் 21 - விருதுநகர், சிவகங்கை - குறுக்குப்பாதை, சிவகாசி-விருதுநகர் நெடுஞ்சாலை அருகில், சிவகாசி; போக்குவரத்து நகர், ஆவின் பால்பண்ணை மேல்புறம், காரைக்குடி

    மார்ச் 23 - கடலூர், விழுப்புரம் (தனி) - மஞ்சை நகர் மைதானம், கடலூர்; ஆவின் பால்பண்ணை எதிரில், திருச்சி பைபாஸ் சாலை, விழுப்புரம் நுழைவுவாயில்

    மார்ச் 25 - திண்டுக்கல், தேனி - அங்குவிலாஸ் விளையாட்டுத் திடல், பழனி ரோடு, திண்டுக்கல்; தேனி-ஆண்டிப்பட்டி சாலை, கோவில்பட்டி ஊராட்சி, ஆண்டிப்பட்டி

    மார்ச் 28 - மதுரை - திருப்பாலை கிருஷ்ணா திடல், மதுரை

    மார்ச் 29 - ராமநாதபுரம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ராமநாதபுரம்

    ஏப்ரல் 1 - புதுச்சேரி - ஏ.எப்.டி. மைதானம், கடலூர் சாலை, உப்பளம்

    ஏப்ரல் 3 - நாமக்கல், சேலம் - கருப்பட்டி பாளையம் பிரிவு, கிரீன் பார்க் பள்ளி அருகில், நாமக்கல்; போஸ் மைதானம், சேலம்

    ஏப்ரல் 5 - தஞ்சாவூர், திருச்சி - புதிய பஸ் நிலையம் அருகில், நகராட்சி மைதானம், தஞ்சாவூர்; இடமலைப்பட்டி புதூர் மைதானம், திருச்சி

    ஏப்ரல் 8 - பொள்ளாச்சி, கோவை - சிடிசி மேடு, ஆச்சிப்பட்டி ஊராட்சி, பொள்ளாச்சி; வ.உ.சி. பூங்கா மைதானம், கோவை

    ஏப்ரல் 10 - நீலகிரி (தனி) - சிறுமுகை நான்கு ரோடு, தேரம் பாளையம், காரமடை

    ஏப்ரல் 11 - திருநெல்வேலி - மாநகராட்சி திடல், திருநெல்வேலி

    ஏப்ரல் 13 - கரூர், பெரம்பலூர் - திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், கரூர்; தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறி

    ஏப்ரல் 15 - ஆரணி, வேலூர் - ஆரணி சாலை மைதானம், செய்யாறு; காட்டுக்கொல்லை, இடையன்காடு, அணைக்கட்டு

    ஏப்ரல் 17 - கிருஷ்ணகிரி, தருமபுரி - பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி பிரதான சாலை, கிருஷ்ணகிரி; பொதுப்பணித்துறை பெருந்திட்ட வளாகம், தருமபுரி

    ஏப்ரல் 19 - அரக்கோணம், திருவள்ளூர் (தனி) - அம்மூர், ராணிப்பேட்டை; ஓ.சி.எப். மைதானம் அருகில், ஆவடி

    ஏப்ரல் 20 - மத்திய சென்னை, வடசென்னை

    ஏப்ரல் 21 - ஆலந்தூர், தென் சென்னை

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai