Enable Javscript for better performance
ராமதாஸூம் விஜயகாந்தும் இணைந்து பிரசாரம் செய்வார்களா?- Dinamani

சுடச்சுட

    

    ராமதாஸூம் விஜயகாந்தும் இணைந்து பிரசாரம் செய்வார்களா?

    By dn  |   Published on : 10th March 2014 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilisai

    தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பது ஏன்?

    இழுபறி என்று சொல்ல முடியாது. பல கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. ஒரே தொகுதியை பல கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்கலாம். இதை இழுபறி என்று சொல்லமுடியாது. தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பிய தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    விஜயகாந்த், ராமதாஸ் போன்றோர் எதிரெதிர் முனையில் இருந்து செயல்பட்டவர்கள். தற்போது பாஜக அணியில் இடம்பெற்றாலும், ஒருங்கிணைந்து பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதுபோல தெரிகிறதே?

    ரோஜாமாலையும் இருக்கிறது. பல மலர்களால் கட்டப்பட்ட கதம்ப மாலைகளும் இருக்கின்றன. பாஜக என்பது வெற்றிமாலை. இதில் எதிரெதிர் தளத்தில் இயங்கிய கட்சிகள் இடம்பெற்றாலும், வெற்றியைப் பெற ஒருங்கிணைந்து பிரசாரம் செய்வார்கள். ஏனெனில் எல்லோருடைய எண்ணமும் காங்கிரûஸ வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான். அதனால் நிச்சயம் இணைந்து பிரசாரம் செய்வார்கள்.

    நரேந்திரமோடி மீண்டும் எப்போது தமிழகம் வருகிறார்?

    இதுவரை 3 முறை தமிழகத்துக்கு நரேந்திரமோடி வந்துசென்றுவிட்டார். தமிழகத்துக்கு 3 முறை வரவேண்டும் என்று நரேந்திரமோடியிடம் முன்பு கேட்டிருந்தோம். அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். மீண்டும் ஒரு முறை வரவேண்டும் என்று கோரியுள்ளோம். நிச்சயம் வருவார்.

    பாஜகவின் வெற்றி வாய்ப்பு?

    இந்த மக்களவைத் தேர்தல் என்பது ஊழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் யுத்தமாகும். வளர்ச்சியின் நாயகமான இருக்கும் மோடியால் பாஜகவுக்கும் பிரகாசமான வெற்றி இருக்கிறது. நாட்டுக்கும் பிரகாசமான வெற்றி இருக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai