சுடச்சுட

  
  pc

  கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் தூத்துக்குடிக்கு வந்தார்.

  அவரை சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி கேமராமேன்களும் மைக்கை நீட்டினர். உடனே, எதுவும் பேசாமல், என்ன என்பதுபோல கையை அசைத்தபடியே கேட்டார். அப்போது, "கூட்டணி...' என ஒருவர் கேட்கத் தொடங்க, "பேட்டி வேண்டாம்' என்ற அர்த்தத்தில் கையை அசைத்தபடி அங்கிருந்து அவர் காரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர், பிற்பகல் 1.40 மணியளவில் தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டுக்குச் சென்று, அண்மையில் திருமணமான மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர், அங்கிருந்து புறப்படத் தயாரான சிதம்பரத்தை மீண்டும் தொலைக்காட்சி கேமராமேன்களும், செய்தியாளர்களும் சூழ்ந்துகொண்டனர். அப்போது, "வேண்டாம்பா.. விட்டுடுங்கப்பா..' எனக் கூறி கையை அசைத்தபடியே புறப்பட்டுச் சென்றார்.""தேர்தல் என்றாலே பயம்.. கூட்டணி என்றால் அதைவிட பயம்'' என, கூட்டத்தில் ஒருவர் கமென்ட் அடிக்க அந்த இடமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai