சுடச்சுட

  

  அணைகள் மூடல்: பாபநாசம், சேர்வலாறில் மின்சார உற்பத்தி பாதிப்பு

  By dn  |   Published on : 11th March 2014 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாசனத்துக்கு தண்ணீர் தேவையில்லாததால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. இதனால் பாபநாசம், சேர்வலாறு நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  சேர்வலாறு அணையில் 20 மெகாவாட் மின்சாரமும், பாபநாசம் அணையில் 32 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யலாம். சேர்வலாறு அணையில் மின்சாரம் உற்பத்தி செய்ய நீர்மட்டம் 65 அடிக்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும், அணையில் இருந்து 1,200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டால்தான் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இப்போது அணையின் நீர்மட்டம் 65 அடிக்கு குறைவாக உள்ளது.

  பாபநாசம் மின் உற்பத்தி நிலையம், அங்குள்ள 4 டர்பைன் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால் ஒரு டர்பைனை இயக்கி 8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவையில்லாத காரணத்தால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டுள்ளன. குடிநீர்த் தேவைக்காக மட்டும் பாபநாசம் அணையிலிருந்து 54.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், பாபநாசம், சேர்வலாறு நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  அணைகளின் நீர்மட்டம்: திங்கள்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 64.57 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.97 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 38.70 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 29.03 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 37.50 அடியாகவும் இருந்தது.

  பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 99.65 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 81 கனஅடியும், கடனாநதி அணைக்கு 15.77 கனஅடியும், ராமநதி அணைக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai