சுடச்சுட

  

  வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.

  இது குறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (மார்ச் 10) கூறியது: தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வேண்டும் என்பதற்காக புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவளிக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் நடைபெறாத வகையில் ஒடுக்கப்பட்டுள்ளது.

  தலித் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டது. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் அம்மா உணவகம் மற்றும் அம்மா குடிநீர் பாட்டில்கள் மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் தண்டனை குறைக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  வட தமிழகத்தில் வேலூர், அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் புரட்சி பாரதம் கட்சிக்கு அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர். அந்தத் தொகுதிகளில் உள்ள அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13-ஆம் தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளோம் என்று பூவை எம்.ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai