சுடச்சுட

  
  highcourt

  அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியம் அதிமுகவின் சின்னத்தை குறிப்பிடுகிறதா என பரிசீலனை செய்து வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் மனு விவரம்:

  தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் கட்சி சின்னமான இரட்டை இலை முத்திரைகளை அகற்றக் கோரிய வழக்கு ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

  மக்களவைத் தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

  அரசு சொத்துகளில் அதிமுகவின் சின்னம் மற்றும் முதல்வரின் உருவப்படங்கள் இருப்பதால் அது வாக்களிக்கும் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

  இதனால் அரசு ஸ்மால் பஸ், குடிநீர் பாட்டில்களில் உள்ள இரட்டை இலை மற்றும் முதல்வர் புகைப்படத்தை அகற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

  இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு திங்கள்கிழமை (மார்ச் 10) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் விடுதலை ஆஜரானார். தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, அரசு குடிநீர் பாட்டில்கள் மற்றும் அரசு உடமைகளில் உள்ள முதல்வர் படங்கள் ஏற்கெனவே மறைக்கப்பட்டு விட்டன.

  அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள ஓவியம் இரட்டை இலையா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. அது தொடர்பாக இரண்டு நாள்களுக்குள் பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

  இதைத் தொடர்ந்து மார்ச் 13-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai