Enable Javscript for better performance
இடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா. பாண்டியன் - Dinamani

சுடச்சுட

    
    tha_pandiyan

    வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்தார்.

    அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் து. ராஜா, மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், திமுகவிடம் இருந்து வந்துள்ள அழைப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    பல மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் கூறியது: வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இரு கட்சிகளுக்கும் வாய்ப்புள்ள தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம்.

    மற்ற தொகுதிகளில் பாஜகவை தோற்கடிக்கும் கட்சிகளை ஆதரிப்போம். வரும் 15-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிட உள்ள தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிப்போம். திமுக எங்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனாலும் அக்கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது என்றார் தா.பாண்டியன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai