சுடச்சுட

    

    எளிமையான இயற்பியல் வினாத்தாள்: பிளஸ் 2-வில் ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு

    By dn  |   Published on : 11th March 2014 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

    பிளஸ் 2-வில் முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இயற்பியல் பாடத்துடன் திங்கள்கிழமை தொடங்கின. முதல் பாடமான இயற்பியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால் பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்தனர்.

    தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் கூறியது: இயற்பியல் பாடத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்த கேள்விகளே அதிகளவில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு ஒரு மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    அதேபோல், பொருளாதாரப் பாட வினாத்தாளும் மிகவும் எளிமையாக இருந்தது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    36 பேர் சிக்கினர்: மாநிலம் முழுவதும் இயற்பியல், பொருளாதாரப் பாடங்களில் காப்பியடித்ததாக 36 மாணவர்கள் திங்கள்கிழமை பிடிபட்டனர்.

    இயற்பியல் பாடத்தில் 6 மாணவர்களும், பொருளாதாரப் பாடத்தில் பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதும் 6 மாணவர்களும், தனித் தேர்வர்கள் 24 பேரும் காப்பியடிக்கும்போது பிடிபட்டதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை மாவட்டத்தில் பொருளாதார பாடத்தில் காப்பியடித்ததாக 11 தனித் தேர்வர்கள் பிடிபட்டனர். அதற்கடுத்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் 8 தனித் தேர்வர்கள் சிக்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai