சுடச்சுட

  
  fishermen

  கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து 3460 பக்தர்கள் செல்ல உள்ளனர்.

  இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நடுவில் கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது.

  இந்தத் தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயிலில் வருடந்தோறும் திருவிழா நடைபெறும்.

  இந்த வருடத்துக்கான திருவிழா மார்ச் 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து இரவு தேர்ப்பவனி நடைபெறும்.

  மறுநாள் காலையில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்று கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.

  இதுகுறித்து திருவிழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சகாயராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  தமிழகப் பகுதிகளிலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 3460 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்வதற்காக 95 படகுகளும், அவசர உதவிக்காக கூடுதலாக இரண்டு படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான அடையாள அட்டை மார்ச் 13 ஆம் தேதி வழங்கப்படும்.

  கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்கள் மார்ச் 15 ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து ராமேசுவரம் துறைமுகப் பகுதியிலிருந்து பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளின் சோதனைக்குப் பின் படகுகளில் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு வர அனுமதி கிடையது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai