சுடச்சுட

  

  காங்கிரஸை பலவீனப்படுத்த முயற்சி: ஞானதேசிகன் குற்றச்சாட்டு

  By dn  |   Published on : 11th March 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gnadesigan

  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த முயற்சிகள் நடப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் குற்றம்சாட்டியுள்ளார்.

  வரும் மார்ச் 14-ஆம் தேதி தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.

  இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிடத்திடம் ஆலோசனை நடத்துவதற்காக கடந்த வியாழக்கிழமை (மார்ச் 6) தில்லி சென்றார். மற்ற மாநிலங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிரமாக இருப்பதால், அடுத்த கட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

  சோனியா, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்த பிறகே ஞானதேசிகன் சென்னை திரும்ப இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தலை எதிர்கொள்ளும் உற்சாகத்துடன் காங்கிரஸ் நண்பர்கள் உள்ளனர்.

  ஆனால், காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில், கூட்டணி குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. யூகங்கள் இறக்கை கட்டி பறக்கின்றன.

  தமிழகத்தில் தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும். இதில் மாநில நிóர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

  தேர்தல் பணிகள், தலைவர்களின் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள், கூட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதன் விவரங்களுடன் மாவட்டத் தலைவர்கள் வர வேண்டும் என ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai