சுடச்சுட

    

    காங்கிரஸ் வந்தாலும் வரவேற்போம்: ரவிக்குமார்- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்

    By dn  |   Published on : 11th March 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் (தனி) தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா?

    அதற்கான போட்டியில் நான் இல்லை.

     

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றாலே தனித் தொகுதிகள் மட்டும் தானா?

    வி.சி.க. அனைவருக்கும் பொதுவான அரசியல் கட்சி. கட்சியில் மற்ற சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்குவதற்காக பொதுத் தொகுதிகள் கேட்டோம். கிடைக்கவில்லை என்பதில் வருத்தம் தான்.

     

    திமுக கூட்டணியில் மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா?

    இடதுசாரி கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. இது குறித்து இடதுசாரி கட்சிகளின் தலைவர்களோடு நாங்கள் பேசி வருகிறோம். வரும் 14-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு முடிவு சொல்வதாகக் கூறியுள்ளனர்.

     

    திமுக அணிக்கு காங்கிரஸ் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறதே?

    மதச்சார்பற்ற கூட்டணியைப் பலப்படுத்தும் வகையில் காங்கிரஸ் வந்தாலும் நாங்கள் வரவேற்போம். இதனை கருணாநிதியிடமும் தெரிவித்து விட்டோம்.

     

    தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் வலுவான கூட்டணியை பாஜக அமைத்துள்ளது. இது யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?

    அதிமுகவின் வாக்குகளை பாஜக கூட்டணி பிரிக்கும். 1998, 99-க்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைக்காமலேயே அக்கட்சியின் வாக்குகளை அதிமுக பெற்று வந்தது.

    ஆனால், இப்போது பாஜகவே தனி அணியை அமைத்திருப்பதால் பாஜக வாக்குகள் அதிமுகவுக்குச் செல்லாது. ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அதிமுகவினரே பிரசாரம் செய்கின்றனர். எனவே, இந்தமுறை அதிமுக வாக்குகளும் பாஜகவுக்குச் செல்லும் வாய்ப்புகளே அதிகம்.

     

    திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

    அதிமுக தனித்து நிற்பது, பாஜக கூட்டணி வாக்குகளைப் பிரிப்பது ஆகியவை திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும். அதே நேரத்தில் பாஜக கூட்டணியால் சில தொகுதிகளில் திமுகவுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றார்

    ரவிக்குமார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai