சுடச்சுட

  
  gselvam

  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக சிறுவேடல் ஜி. செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிறுவேடல் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் செல்வம். இவர் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த செல்வத்தின் தந்தை கணேசன் 1961-ஆம் ஆண்டு கிளைக் கழக செயலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

  1981-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணைச் செயலராகவும், 1991-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய துணைச் செயலராகவும் பதவி வகித்தார்.

  1996-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  இப்போது வரை தொடர்ந்து கட்சிப் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

  தந்தை கணேசனைப் போல செல்வமும் இளமை பருவம் முதல் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

  1996-ஆம் ஆண்டு ஒன்றியப் பிரதிநிதியாகவும், 2002-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணை அமைப்பாளராகவும், 2008-ஆம் ஆண்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்தார்.

  2012-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக கட்சிப் பணி ஆற்றி வருகிறார்.

  2008-ஆம் ஆண்டு திமுக பொருளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சகீலா என்பவரை திருமணம் செய்தார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai