சுடச்சுட

    
    muralidhar_rao

    பாஜக கூட்டணியில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை என அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. அதுபோல வெளியான செய்தி தவறானது.

    இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கூட்டணியை முறைப்படி அறிவிக்க உள்ளார். அதற்கான தேதியை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விரைவில் அறிவிப்பார். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. நரேந்திர மோடியின் செல்வாக்கால் தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்றார்.

    பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai