சுடச்சுட

    
    flag

    நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிக் கொடிகள், விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு மவுசு கூடியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுதவிர தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக கொடி, சின்னம் அதிக அளவில் விற்பனை ஆவதாக தெரிவிக்கின்றனர்.

    நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான கூட்டணிகளும், கட்சி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளுக்கான கொடிகள், பிளாஸ்டிக் தோரணங்கள், கட்சித் தலைவர்களின் முகம் பதித்த முகமூடிகள், விசிறிகள், பேட்ஜ்கள், கொடைகள், கீ செயின், தொப்பிகள், மஃப்ளர், 3டி படங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    கட்சிக் கொடிகளுக்குத் தேவையான துணிகள் சூரத், தில்லி, ஐதராபாத் மற்றும் திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டு, சென்னை வண்ணார்பேட்டையில் அவற்றை கொடிகளாகவோ, பேட்ஜ்களாவோ தைக்கும் பணி நடைபெறுகிறது.

    இது குறித்து சென்னை பாரிமுனையில் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள பாலாஜி கூறியது:

    நரேந்திர மோடியின் படங்கள் பொறித்த கொடிகள், தோரணங்கள் உள்ளிட்டப் பொருள்களுக்குத்தான் இப்போது அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான ஆர்டர்கள்தான் தான் நிறைய பெற்றுள்ளோம். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இங்கிருந்துதான் சப்ளை செய்கிறோம். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக எங்கள் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய கெடுபிடி காரணமாக கடந்த தேர்தலின்போது நாங்கள் உற்பத்தி செய்த பொருள்களே 50 சதவிதம் விற்பனை செய்யாமல் தேங்கி இருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் தேவைக்கு ஏற்றாற்போல் தான் பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம் என்றார் அவர்.

    முதலீடு செய்ய தயக்கம்: மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரஹ்மத்துல்லா கூறியது: தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டின் காரணமாக அதிகமாக முதலீடு செய்யத் தயக்கமாக உள்ளது. பொதுவாக ஆளும் கட்சி சம்பந்தப்பட்ட பொருள்களுக்குத்தான் அதிக தேவை ஏற்படும். இந்த தேர்தலிலும் அதிமுகவின் கொடிகளுக்கே அதிக வரவேற்பு உள்ளது. பாஜக மூத்தத் தலைவர் நரேந்திர மோடியின் படங்கள் பதித்த பொருள்கள் குறித்தும் நிறைய பேர் விசாரித்துச் செல்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai