சுடச்சுட

  
  cmp

  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வருகிறார். அவர் பேசுவதற்காக புறவழிச்சாலைப் பகுதியில், பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

  சிதம்பரம் தொகுதி (தனி) வேட்பாளர் மா.சந்திரகாசி, கடலூர் தொகுதி வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவன் ஆகியோரை ஆதரித்து சிதம்பரம் அருகே புறவழிச்சாலை

  அருகே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மேடையில் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பேசுகிறார்.

  மேடை முன் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடைக்கு எதிர்புறத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது.

  நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி ஆகியோர் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டனர்.

  பலத்த போலீஸ் பாதுகாப்பு: முதல்வர் வருகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஐஜி ரவி, வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத், உளவுத் துறை ஐஜி அம்ரீஷ் பூஜாரி, விழுப்புரம் டிஐஜி முருகன், முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு எஸ்பி முருகேசன், ஏடிஎஸ்பி ராஜராஜன், கடலூர் மாவட்ட எஸ்பி ராதிகா உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்பிக்கள் சிதம்பரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai