சுடச்சுட

  
  wall

  கிருஷ்ணகிரியில் பொது இடங்களில் அனுமதியில்லாமல் அரசியல் கட்சியினர் செய்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால், அரசு அலுவலர்கள் திண்டாடி வருகின்றனர்.

  கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் விழா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தலைவர்களின் வருகை, மாநாடு போன்றவற்றுக்காக கிருஷ்ணகிரியில் உள்ள சுவர்கள், மேம்பாலங்கள், சாலைகளின் இரு புறங்களிலும் அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சியினரால் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தின் சுற்றுச் சுவரில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்களை எழுதியுள்ளனர்.

  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து 24 மணி நேரத்தில் அனுமதியில்லாமல் செய்துள்ள விளம்பரங்களை அரசியல் கட்சியினர் அழிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் உத்தரவிட்டார். அவ்வாறு அழிக்காவிட்டால், அரசு சார்பில் அந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரின் கணக்கில் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இருப்பினும், இந்த விளம்பரங்களை அரசியல் கட்சியினர் யாரும் அழிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் அந்த விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்களை அழிக்கப் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். இந்தப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், வருவாய் துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று, இது தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைத் தேடி அழைத்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai