சுடச்சுட

  

  சென்னை உள்பட 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு

  By dn  |   Published on : 11th March 2014 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  poll_returning_officer

  சென்னை உள்பட 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. மாவட்டத் தலைநகரங்களை மக்களவைத் தொகுதிகளாகக் கொண்டுள்ளவற்றுக்கு, மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  39 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம்:

  திருவள்ளூர் (தனி)- கே. வீரராகவராவ், மாவட்ட ஆட்சியர்.

  சென்னை வடக்கு-எம்.லட்சுமி, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர்.

  சென்னை தெற்கு-ஆர்.ஆனந்தகுமார், சென்னை மாநகராட்சி தென் மண்டல இணை ஆணையர்.

  மத்திய சென்னை-ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர்.

  ஸ்ரீபெரும்புதூர்-எம்.சம்பத்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகம்.

  காஞ்சிபுரம் (தனி)-கே.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர்.

  அரக்கோணம்-கே.பலராமன், மாவட்ட வருவாய் அதிகாரி, வேலூர் மாவட்ட ஆட்சியரகம்.

  வேலூர்-ஆர்.நந்தகோபால், மாவட்ட ஆட்சியர்.

  கிருஷ்ணகிரி-டி.பி.ராஜேஷ், மாவட்ட ஆட்சியர்.

  தருமபுரி-கே.விவேகானந்தன், மாவட்ட ஆட்சியர்.

  திருவண்ணாமலை-ஏ.ஞானசேகரன், மாவட்ட ஆட்சியர்.

  ஆரணி-டி.என்.பத்மஜாதேவி, மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர், செய்யாறு.

  விழுப்புரம் (தனி)-வி.சம்பத், மாவட்ட ஆட்சியர்.

  கள்ளக்குறிச்சி-எம்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர்.

  சேலம்-கே.மகரபூஷணம், மாவட்ட ஆட்சியர்.

  நாமக்கல்-வி.தட்சணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர்.

  ஈரோடு-வி.கே.சண்முகம், மாவட்ட ஆட்சியர்.

  திருப்பூர்-ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியர்.

  நீலகிரி (தனி)-பி.சங்கர், மாவட்ட ஆட்சியர்.

  கோவை-அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர்.

  பொள்ளாச்சி-கே.கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலர், கோவை மாவட்ட ஆட்சியரகம்.

  திண்டுக்கல்-என்.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர்.

  கரூர்-எஸ்.ஜெயந்தி, மாவட்ட ஆட்சியர்.

  திருச்சி-ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சியர்.

  பெரம்பலூர்-தாரேஷ் அஹமத், மாவட்ட ஆட்சியர்.

  கடலூர்-ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட ஆட்சியர்.

  சிதம்பரம் (தனி)- இ.சரவணவேல்ராஜ், மாவட்ட ஆட்சியர், அரியலூர்.

  மயிலாடுதுறை-டி.முனுசாமி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்.

  நாகப்பட்டினம் (தனி)- எஸ்.நடராஜன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.

  தஞ்சாவூர்-சுப்பையன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.

  சிவகங்கை-வி.ராஜாராமன், மாவட்ட ஆட்சியர்.

  மதுரை-எல்.சுப்பிரமணியன், மதுரை மாவட்ட ஆட்சியர்.

  தேனி-கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்.

  விருதுநகர்-டி.என்.ஹரிஹரன், மாவட்ட ஆட்சியர்.

  ராமநாதபுரம்-கே.நந்தகுமார், மாவட்ட ஆட்சியர்.

  தூத்துக்குடி-எம்.ரவிகுமார், மாவட்ட ஆட்சியர்.

  தென்காசி (தனி)-பி. உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி.

  திருநெல்வேலி-எம்.கருணாகரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்.

  கன்னியாகுமரி-எஸ்.நாகராஜன், மாவட்ட ஆட்சியர்.

  12 உதவி அதிகாரிகள் நியமனம்: ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உதவிடும் வகையில் 12 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வழங்கல் அதிகாரி நிலையில் இருந்து தாசில்தார் நிலை வரை 12 அதிகாரிகள் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai