சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் போரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  இதில் அக்கட்சியின் தமிழ் மாநிலப் பொறுப்பாளர் சலீம் மக்கார் பேசியது: அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

  இதில் முதல்கட்டமாக, 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

  இதில் வேலூர் தொகுதியில் நான் போட்டியிட உள்ளேன். தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, வரும் 12-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பார்.

  மேலும் திரிணமூல் காங்கிரஸை ஆதரித்து தமிழகத்தில் அன்னா ஹசாரே பிரசாரம் செய்யவுள்ளார் என்றார் அவர்.

  கட்சியின் மாநிலத் தலைவர் சபீதா, செயலாளர் மாடசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai