சுடச்சுட

  
  cash

  தருமபுரியில் வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.7.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

  தருமபுரி தேர்தல் வட்டாட்சியர் மணி தலைமையிலான பறக்கும் படையினர் தொப்பூர் வனப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், காரில் பெங்களூருவைச் சேர்ந்த உதயகுமார் (40) உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3.40 லட்சம் பணத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதேபோல, மற்றொரு காரில் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு வந்த ராம்குமார் (36) உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் எடுத்து வந்தது சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.40 லட்சம் உதவி தேர்தல் அலுவலர் பி.மேனகாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

  இதேபோல, பாலக்கோடு தொகுதி தேர்தல் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் பறக்கும் படையினர் அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

  அப்போது, ஒகேனக்கலில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரில் வந்த செந்தில்குமார் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.90 வட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai