சுடச்சுட

  
  alagiri

  மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டே திமுக தலைமை தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

  மேலும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவும் என்றும், பெரும்பாலான தொகுதிகளில் திமுகவுக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ், மதுரை சிறப்பு நிருபர் கோகுல் வண்ணனுக்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில் அழகிரி கூறியிருப்பதாவது:

  வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள். வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முறையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இன்னும் சொல்லப்போனால், அதிமுகவிலிருந்துவிட்டு பின்னர் திமுகவுக்கு வந்தவர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

  அழகிரியின் ஆதரவாளர்களான முன்னாளó மத்திய அமைச்சர் டி.நெப்போலியன், நடிகர் ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர், சென்னையில் திங்கள்கிழமை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  "வாய்ப்பு அளிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை இதனால் எங்களுக்கு ஏமாற்றமும் இல்லை' என்று அழகிரி ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai