சுடச்சுட

    

    வடசென்னை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இரா.கிரிராஜன் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

    வடசென்னை - இரா.கிரிராஜன்: வடசென்னை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கிரிராஜன் திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்

    காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தென்சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்: திமுக அமைப்புச் செயலாளரான டி.கே.எஸ்.இளங்கோவன் 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வடசென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது இவருக்கு தென்சென்னை தொகுதி மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இவர் 2-ஆவது முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

    மத்திய சென்னை - தயாநிதிமாறன்: முரசொலிமாறனின் மகனும் கருணாநிதியின் பேரனுமான தயாநிதிமாறனுக்கு 3-ஆவது முறையாக மத்திய சென்னையில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், மத்திய ஜவுளித்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai