சுடச்சுட

  

  தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக தலைவர்கள் திங்கள்கிழமை பேச்சு நடத்தினர்.

  தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் மோகன்ராஜ், வெங்கடேசன், அருள்செல்வன், பாஜக சார்பில் மூத்த தலைவர் கே.என். லட்சுமணன், மாநிலப் பொதுச்செயலாளர் சரவணப்பெருமாள், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

  மார்ச் 7-ஆம் தேதி தேமுதிக அலுவலகத்துக்குச் சென்ற பாஜக தலைவர்கள் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். அதைத் தொடர்ந்து மார்ச் 8-ஆம் தேதி எல்.கே. சுதீஷ், வி.சி. சந்திரகுமார், அழகாபுரம் மோகன்ராஜ் உளளிட்டோர் பாஜக அலுவலகத்தில் பேச்சு நடத்தினர்.

  அதன் தொடர்ச்சியாக 3-ஆவது முறையாக தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை குறித்து தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, இன்னும் இரண்டு நாள்களில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்றார்.

  வைகோ வீட்டில் விருந்து: மதிமுக ஏற்பாடு செய்துள்ள மனித உரிமை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவுக்கு, வைகோ அவரது வீóட்டில் திங்கள்கிழமை மதிய விருந்து அளித்தார்.

  இந்த விருந்தில் பொன். ராதாகிருஷ்ணன், எஸ். மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai