சுடச்சுட

    

    புதுக்கட்சி தொடங்கும் திட்டம் இப்போது இல்லை: மு.க.அழகிரி

    By dn  |   Published on : 11th March 2014 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    alagiri

    தி.மு.க.வில் நான் தற்போது உறுப்பினராக இல்லை என்பதால் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பிரசாரம் செய்ய மாட்டேன்; புதுக் கட்சி தொடங்கும் திட்டமும் இப்போது இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

    சென்னையை அடுத்த பம்மலில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பம்மல் நல்லதம்பியை மு.க.அழகிரி திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியது: பம்மல் நல்லதம்பி உடல் நலமில்லாமல் இருக்கும் தகவல் 4 நாள்களுக்கு முன்புதான் தெரியும். நான் சிறுவனாக இருக்கும்போதே அவரை நன்கு தெரியும். அவரது உடல்நலம் குறித்து அவரிடமும் குடும்பத்தினரிடமும் விசாரிக்க வந்தேன்.

    எனது ஆதரவாளர்கள் என்னைப் போலவே தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பர். புதுக் கட்சி தொடங்கும் எண்ணம் இப்போது இல்லை. எனது ஆதரவாளர்களுடன் கலந்துபேசி 2 மாதங்களுக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

    மு.க.அழகிரி வருவதை அறிந்து ஏராளமான தி.மு.க தொண்டர்கள் பம்மல் பொழிச்சலூர் பிரதான சாலையில் கூடி நின்றனர். அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai