Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: அமைச்சர், வேட்பாளர் கார்களில் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: அமைச்சர், வேட்பாளர் கார்களில் சோதனை

    By dn  |   Published on : 11th March 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல், நடத்தை விதிகள் அமலில் உள்ளதையொட்டி, அமைச்சர், வேட்பாளர் மற்றும் கட்சியினரின் கார்களை பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தலா 3 பறக்கும் படைகள் வீதம், மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில், விளவங்கோடு கூடுதல் வட்டாட்சியர் ராஜாசிங் தலைமையிலான பறக்கும் படையினர், காலையில் வடசேரி, ஒழுகினசேரி பகுதிகளில் வேன், கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, ஒரு காரில் அமைச்சர் பச்சைமால், கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம் உள்ளிட்டோர் ரட்சணிய சேனை டிவிஷனல் கமாண்டர் ஜெயசீலனை வெட்டூர்ணிமடம் தேவாலயத்தில் சந்திக்கச் சென்றனர்.

    இவர்கள் வந்த காரையும் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இச்சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai