சுடச்சுட

    

    மீனவர்கள் 21 பேருக்கு காவல் நீடிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    By dn  |   Published on : 11th March 2014 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்டபம், ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 24 ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிப்ரவரி 13 ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேசுவரம் பகுதி, மண்டபம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதிபதி மார்ச் 10 வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    மீண்டும் திங்கள்கிழமை 21 மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இலங்கை கடற்படையினர் வழக்கு சம்பந்தப்பட்ட போதுமான ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காததால், மார்ச் 24 ஆம் தேதி வரை சிறைக் காவலை நீடித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai