சுடச்சுட

  
  ambumani_rangaswamy

  முதல்வர் என்.ரங்கசாமியை அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சந்தித்தார். அப்போது புதுவை மக்களவைத் தொகுதியை பாமகவுக்கு விட்டுக் கொடுக்குமாறு முதல்வர் என்.ரங்கசாமியிடம் அவர் வலியுறுத்தினார்.

  புதுவையில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக பூர்வாங்கப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் முதல்வர் ரங்கசாமி இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

  இதனிடையே, புதுவை தொகுதி பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக் கோரி அன்புமணி ஏற்கெனவே இரண்டு முறை ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினார். ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

  புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார்.

  இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி-அன்புமணி சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. அதில் மீண்டும் அதே கோரிக்கையை அன்புமணி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

  இது தொடர்பாக பாமக வேட்பாளர் அனந்தராமன் கூறியது: பாமக வேட்பாளருக்கு என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரினார். கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார் என்றார் அனந்தராமன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai