சுடச்சுட

  
  money

  மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

  மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, உதவி வேளாண் அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் முதலைப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது, எரையம்பட்டியிலிருந்து நாமக்கல் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ.10 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

  காரில் வந்த தனியார் கோழி முட்டை நிறுவன ஓட்டுநர் சிவக்குமாரிடம் விசாரித்ததில் , திருச்செங்கோடு வட்டம், எரையம்பட்டியில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முட்டை வியாபாரத் தொகை ரூ.10 லட்சத்தை நாமக்கல்லிலுள்ள நிறுவன அலுவலகத்தில் கணக்கு ஒப்படைத்துவிட்டு வங்கியில் செலுத்த கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.

  எனினும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அந்தப் பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியரும், உதவித் தேர்தல் அலுவலருமான காளிமுத்துவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, உரிய ஆவணங்களைக் காண்பித்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி நிறுவன உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகை மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai