Enable Javscript for better performance
வேலூர் தொகுதியில் அப்துல் ரஹ்மான் மீண்டும் போட்டி- Dinamani

சுடச்சுட

    
    abd

    வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் அப்துல் ரஹ்மான் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் சென்னை ராயபுரத்திலுள்ள ரம்ஜான் மஹாலில் தேசிய துணைத் தலைவர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆஹா தலைமையில் திங்கள்கிழமை (மார்ச் 10) நடைபெற்றது.

    இதில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ் மாநிலத் தலைவருமான கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியது:

    தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தற்போதையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் மீண்டும் போட்டியிடுகிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏணி சின்னத்தில் வேலூரில் போட்டியிடுவோம்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் முஸ்லிம்களுக்கு நான்கு தொகுதிகள் வழங்க வேண்டும் என்பது சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும், தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 2 முஸ்லிம்களுக்கும் என மொத்தம் 4 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம். இதனால் ஒட்டுமொத்த சமுதாய வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே கிடைக்கும் என்றார் காதர் மொகிதீன்.

    பேட்டியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர், மாநிலச் செயலர் சாயல் மஹபூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai