சுடச்சுட

  

  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன்

  By dn  |   Published on : 11th March 2014 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  JAGATHRATJAGAN

  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க.வில் செயல்பட்டு வந்த ஜெகத்ரட்சகன் முதல்முதலாக 1980-ஆம் ஆண்டு உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.ராமதாûஸ எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  இதைத் தொடர்ந்து 1984-ஆம் ஆண்டு செங்கல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ராமுவை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணி சார்பில் உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சுந்தரிடம் தோல்வியடைந்தார்.

  இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்தப் பிறகு ஜெகத்ரட்சகன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி நின்றார்.

  இதைத் தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் கே.வி. தங்கபாலுவை எதிர்த்து தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  இதைத் தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு ஜாதி அடிப்படையில் வீர வன்னியர் பேரவை என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

  பின்னர் 2004 ஆகஸ்ட் மாதம் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றினார்.

  2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை தி.மு.க.வுடன் இணைத்தார்.

  அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளரும் மத்திய ரயில்வே இணை அமைச்சருமான ஆர். வேலுவை தோற்கடித்தார்.

  அதைத் தொடர்ந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

  அதன் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலையிட்ட பிறகு, ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

  மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வந்த ஆதரவை விளக்கிக் கொண்ட பிறகு, 2013 மார்ச் 20-ஆம் தேதி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

  இந்நிலையில் ஜெகத்ரட்சகனை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.க. தலைமை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

   

  வாழ்க்கைக் குறிப்பு

   

  பெயர்: எஸ். ஜெகத்ரட்சகன் (63)

  பெற்றோர்: சுவாமிகண்ணு கவுண்டர் - லட்சுமியம்மாள்

  பிறந்த தேதி: 15.08.1950

  பிறந்த ஊர்: கலிங்கமலை (விழுப்புரம் மாவட்டம்)

  பதவி: உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் (அ.தி.மு.க.) 1980.

  செங்கல்பட்டு மக்களவை உறுப்பினர் (அ.தி.மு.க.) 1984.

  அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் (1985 - 1989)

  அரக்கோணம் மக்களவை உறுப்பினர் (தி.மு.க.) 1999.

  வெளியுறவுத் துறை மற்றும் மனித மேம்பாட்டுத் துறை ஆணைய உறுப்பினர் (1999-2000).

  கனரக மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினர் (2000 - 2004).

  அரக்கோணம் மக்களவை உறுப்பினர் (தி.மு.க.) 2009.

  மத்திய இணை அமைச்சர் 2013 மார்ச் 20 வரை.

  தொழில்: பாரத் பொறியியல் கல்லூரி, பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் நிறுவனர்.

  மனைவி: ஜே. அனுசுயா

  மகன்: லட்சுமி நாராயணன் (எ) சன்தீப் ஆனந்த்

  மகள்: ஸ்ரீநிசா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai